Home உலகம் பட்டுப்பாதை திட்டத்தில் இந்தியா இடையூறு – சீனா கடும் எச்சரிக்கை!

பட்டுப்பாதை திட்டத்தில் இந்தியா இடையூறு – சீனா கடும் எச்சரிக்கை!

996
0
SHARE
Ad

Silk_routeபெய்ஜிங், ஏப்ரல் 17 – இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, கடல் சார் ‘பட்டுப்பாதை திட்டம்’  (Silk Road Project) என்ற பெயரில், சீனா மிகப் பெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட அந்த திட்டத்திற்கு, இந்தியா இடையூறாக இருந்தால், மிகப் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளது.

ஆசியாவில் சீனாவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் முன்னேறி வரும் இந்தியாவிற்கு தடை ஏற்படுத்தும் வகையிலும், மேற்காசிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை சீனாவிற்கு தங்குதடையின்றி கொண்டு செல்லவும் சீனா, இந்த பட்டுப்பாதை திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக, இந்தியக் கடல் பகுதியில் இருக்கும் இலங்கை  மியான்மர், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு பல்வேறு  உதவிகளைச் செய்து அந்நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், சீனாவின் திட்டத்தை முடக்க இந்தியப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய திட்டம் தான் ‘மௌசம்’ (Mausam). பழங்காலத்தில் மேற்கு நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த வர்த்தகம் மற்றும் கலாசார உறவை பின்பற்றி அதே பாதையில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

#TamilSchoolmychoice

இதனை உணர்ந்துள்ள சீனா, இது தொடர்பாக இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறையின் முக்கிய அதிகாரியான ஹூ ஸிசெங் கூறுகையில், “சீனாவின் கடல் வழி மற்றும் சாலை வழி பட்டுப்பாதை திட்டத்திற்கு இந்தியா ஒரு பாலமாக இருக்கிறது. இந்த திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த சீனா தயாராக உள்ளது. இதில் பங்கெடுக்க வில்லை என்றாலும் முடக்க நினைக்கக் கூடாது. ஒருவேளை, இந்தியா இதற்கு இடையூறாக இருந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.