ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவானதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் தைவான் தலைநகரான தாய்பேயில் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் கடற்பரப்பில் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்தன.
ஜப்பானை ஒட்டியுள்ள ஒக்கினாவா தீவு கூட்டங்களை கடலில் மூழகடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் சுனாமிக்கு வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானொலி அறிவித்துள்ளது.
இதனிடையே நிலநடுகத்தின் அளவு 6.6 மட்டுமே என தெரிவித்துள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், கடற்கரை பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு மட்டுமே அலைகள் எழுந்துள்ளதால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என ஆறுதல் தகவல் வெளியிட்டுள்ளது.