Home நாடு சிலுவை அகற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்களில் காலிட்டின் சகோதரரும் ஒருவர்!

சிலுவை அகற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்களில் காலிட்டின் சகோதரரும் ஒருவர்!

759
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 – பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்ற வைத்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களில் தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மூத்த சகோதரரும் ஒருவர்.

Crossremoved

டத்தோ அப்துல்லா அபு பாக்கார் என்ற அவர் தாமான் லிண்டுகன் ஜெயா அம்னோ தொகுதித் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார்.

#TamilSchoolmychoice

தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதில் எந்த தவறும் இல்லை என்று கூறி வரும் அப்துல்லா, ஐஜிபி சகோதரர் என்பதற்காக தான் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தான் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்ததாகக் கூறப்படுவதையும் அப்துல்லா மறுத்துள்ளார்.

தேவாலய நிர்வாகத்தினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் சுமூகத் தீர்வை ஏற்படுத்தவே தான் முயன்றதாகவும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

அப்துல்லா ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில் செய்து வருவதாகவும் ‘தி மலாய்  மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது.