Home உலகம் அகதிகள் படகு விபத்து: படுகொலைக்குச் சமம் என ஐநா கண்டனம்!  

அகதிகள் படகு விபத்து: படுகொலைக்குச் சமம் என ஐநா கண்டனம்!  

543
0
SHARE
Ad

MARE NOSTRUM OPERATION - RESCUE MIGRANTSரோம், ஏப்ரல் 21 – ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக லிபியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 700 அகதிகள் கடலில் மூழ்கினர். இந்த சம்பவத்தை ஐநா அகதிகள் உரிமை ஆணையம் படுகொலைக்குச் சமம் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கார்லோட்டா சமி கூறுகையில், “இத்தாலி மத்திய தரைக்கடல் பகுதியில் இதுவரை கண்டிராத மாபெரும் படுகொலையை நாம் தற்போது கண்டுள்ளோம். நூற்றுக்கணக்கான அகதிகளின் இறப்பு நெஞ்சை அடைக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ஆன்டனியோ கியூட்ரெஸ் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“இந்த சம்பவம், அகதிகளை நடுக்கடலில் மீட்பதற்கான ஏற்பாடுகளை பன்மடங்கு பெருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி உள்ளது. மேலும், நாம் அவர்களுக்கு ஐரோப்பா வருவதற்கான சட்டப்பூர்வமான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்தி உள்ளது.”

“மேற்கூறிய நடவடிக்கைகளை நாம் உடனடியாக செயல்படுத்தாவிட்டால் அகதிகளின் மரணம் தொடர்கதையாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஊடகங்கள் இந்த விபத்திற்கு காரணம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித நேயமற்ற போக்குதான் என கடும் விமர்சனம் செய்துள்ளன. மேலும், 700 அகதிகள் கடலில் மூழ்கிய நாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்பு தினம் என்றும் கூறியுள்ளன.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஃபெடரிகா மோகேரினி கூறுகையில், “இது போன்ற துயரச் சம்பவங்கள் நடக்கக் கூடாது என நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். இனியும் தாமதிக்காமல், இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக இறங்குவதற்கான நேரம் இது. இதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம்” என்று கூறியுள்ளார்.