Home தொழில் நுட்பம் அண்டிரொய்டு கைக்கடிகாரங்களை மேம்படுத்த கூகுள் திட்டம்!

அண்டிரொய்டு கைக்கடிகாரங்களை மேம்படுத்த கூகுள் திட்டம்!

433
0
SHARE
Ad

google-android-wearகோலாலம்பூர், ஏப்ரல் 21 – ஆப்பிள் வாட்சிற்கான எதிர்பார்ப்புகள், கூகுள் நிறுவனத்திற்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக அண்டிரொய்டு வாட்ச்களில் புதிய வசதிகளை மேம்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.

திறன்கைக்கடிகாரங்கள், எப்பொழுதும் திறன்பேசிகளைச் சார்ந்தவையாக இருக்கும். அவற்றால் தனித்து செயல்பட முடியாது. திறன்பேசிகளுக்கு வரும் குறுந்தகவல், அறிவிப்புகள் போன்றவற்றை கைக்கடிகாரங்களில் நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், திறன்பேசிகளை நம்முடன் வைத்திருக்க வேண்டும். இதனை மாற்ற கூகுள் முடிவு செய்துள்ளது.

அதன் படி, திறன்கடிகாரங்கள், திறன்பேசிகளைச் சார்ந்து இருக்காமல் தனித்த செயல்படும் வகையில் அவற்றின் மென்பொருளை மேம்படுத்த கூகுள் தயாராகி வருகின்றது. எனினும் இந்த வசதி, ‘வை-ஃபை’ (Wi-fi) இணைப்பு இருந்தால் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

Android Wear1அதேபோன்று, கைகளை வலது, இடது புறமாக அசைத்தால், கடிகாரத்திற்கான இணைய பக்கங்கள் தானாகவே மாறிக் கொள்ளும் வகையிலும் மேம்படுத்தப்பட இருக்கின்றது.இதில் மற்றறொரு குறிப்படத்தக்க மேம்பாடாக தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுவது, கடிகாரங்களின் மின்சக்தியை சேமிக்கும் வகையில் ஒரு சில தானியங்கி வசதிகளையும் மேம்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே வரும் வெள்ளிக்கிழமை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிள் வாட்ச் வெளியாக இருப்பது குறிப்படத்தக்கது.