Home இந்தியா பிரியங்காவுக்கு அறுவை சிகிச்சை

பிரியங்காவுக்கு அறுவை சிகிச்சை

556
0
SHARE
Ad

priyangka-sliderபுது டில்லி, மார்ச்.5- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வழக்கமான உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு பிரியங்கா சென்றிருந்தபோது அவரது பித்தப்பையில் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொள்ள அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி  டாக்டர் பிரவீன் பாட்டியா தலைமையிலான மருத்துவர் குழு பிரியங்காவுக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொண்டது. பிரியங்காவின் தாயார் சோனியா காந்தி, அவரது சகோதரரும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பிரியங்காவிடம் நலம் விசாரித்தனர்.

#TamilSchoolmychoice

பிரியங்காவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த செய்தியாளர்கள் கேட்டபோது பிரியங்கா நலமுடன் இருக்கிறார் என்றார் ராகுல் காந்தி.