Home கலை உலகம் அமெரிக்க இளைஞரை மணக்கிறார் அசின்

அமெரிக்க இளைஞரை மணக்கிறார் அசின்

975
0
SHARE
Ad

asin-sliderசென்னை, மார்ச்.5- அமெரிக்க இளைஞர் ஒருவரை அசின் காதலிப்பதாகவும் விரைவில் அவரையே திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழில் கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன்  ஜோடியாக நடித்தவர் அசின்.

சில வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியிடப்பட்ட  ‘கஜினி’ படத்தில் அமீர்கான் ஜோடியாக அறிமுகமானார். இதையடுத்து சல்மான்கான் உட்பட பாலிவுட் முன்னணி  கதாநாயகர்களோடு  ஜோடியாக நடித்தார்.

#TamilSchoolmychoice

அவர் நடித்த பல படங்களில் சில படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து அசின் நிறைய விளம்பரங்கள் மற்றும் இந்திப் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தமிழில் கடைசியாக ‘காவலன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். சமீபத்தில் அவரை மீண்டும் விஜய் ஜோடியாக நடிக்க கேட்டதாகவும் அவர் நடிக்க தயங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தியிலும் புதுப்பட வாய்ப்புகளை தவிர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் அமெரிக்க இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் நடிப்புக்கு முழுக்கு போட தீர்மானித்துள்ளதாகவும் தகவல் பரவியது.

இதற்கு முன் சல்மான்கானுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தது. அதை இருவருமே மறுத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் கிடைத்த ஓய்வு நேரத்தில் அமெரிக்காவிலுள்ள தன் நெருங்கிய தோழிகளைப் பார்ப்பதற்காக அசின் தனியாக சென்றார்.

அங்கு தன் எதிர்கால வாழ்க்கை குறித்து யோசித்ததாகவும் இனி தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் தன் நெருங்கிய நண்பர் ஒருவரை அசின் காதலித்து வருவதாகவும்  அவரையே விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் நேற்று பாலிவுட் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவியது.

இதையடுத்து மும்பையிலுள்ள அசினை நேற்று தொடர்பு கொண்டபோது, அவரது கைத்தொலைப்பேசி அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

அவரது செய்தி தொடர்பாளர் ஷகில் கூறுகையில், ‘அசின் திருமணம் என்பது வதந்தி’ என்றார். அசின் தந்தை ஜோசப் தோட்டம்கல்  இச்செய்தி குறித்து நேற்று இரவு வரை கருத்து சொல்லவில்லை. அசினின் திடீர் திருமண விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.