Home உலகம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணி எலிசபெத் அரண்மனைக்கு திரும்பினார்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணி எலிசபெத் அரண்மனைக்கு திரும்பினார்

638
0
SHARE
Ad

england-quuen-sliderலண்டன், மார்ச் 4-  இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக நேற்று லண்டனில் உள்ள மன்னர் 7ம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராணி எலிசபெத் இன்று மருத்துவமனையில் இருந்து பக்கிங்காம் அரண்மனைக்கு திரும்பினார்.

அடுத்த மாதம் தனது 87வது வயதை நிறைவு செய்யும் ராணி எலிசபெத் சிகப்பு நிற உடையில் புன்னகைத்தபடி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

#TamilSchoolmychoice

மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்கியிருந்து அதனால் இதர நோயாளிகளுக்கு அசவுகரியம் ஏற்படுவதை தவிர்க்க விரும்பிய அவர் 24 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அரண்மனைக்கு திரும்பிவிட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் கூறியுள்ளன.

ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.