Home உலகம் அமெரிக்க வாழ் தமிழருக்கு புலிட்சர் விருது!

அமெரிக்க வாழ் தமிழருக்கு புலிட்சர் விருது!

508
0
SHARE
Ad

pulitzer-medalsநியூ யார்க், ஏப்ரல் 22 – அமெரிக்க வாழ் தமிழர் பழனி குமணன், இந்த ஆண்டிற்கான புலிட்சர் விருதை வென்றுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிக்கைக்காக குமணன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய ‘மெடிகேர் அன்மாஸ்க்ட்‘ (Medicare Unmasked) எனும் வரைகலை திட்டத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி குமணன்வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையை பிரசுரிக்கும் டவ் ஜோன்ஸ்‘ (Dow Jones) எனும் நிறுவனத்தில் வரைகலை நிபுணராக‘ (Graphics Designer) பணியாற்றி வருகிறார்.

#TamilSchoolmychoice

வளர்ந்து வரும் புலானாய்வுப் பத்திரிக்கைத் துறைக்காக அவரும், அவரது குழுவினரும் உருவாக்கிய வரைகலைத் திட்டம் பெரும் வெற்றி அடைந்ததால், அவரது குழுவினருக்கு பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையின் உயரிய விருதான புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.