Home நாடு சிலுவை விவகாரம்: ஐஜிபி சகோதரர் அப்துல்லாவிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை

சிலுவை விவகாரம்: ஐஜிபி சகோதரர் அப்துல்லாவிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை

606
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் சிலுவையை வலுக்கட்டாயமாக அகற்றும் போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பாக்கார் இன்று காவல் துறையினரால் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

Abdullah Abu Bakar Taman Medanஇன்று பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட அப்துல்லாவிடம் விசாரணைக்குப் பின்னர் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரிக்கப்படும் முதலாவது நபர் அப்துல்லா ஆவார். தாமான் மேடான் வட்டாரத்திலுள்ள அம்னோ கிளையொன்றின் தலைவருமான அப்துல்லா, இன்று மாலை 4 மணியளவில் காவல் துறை அலுவலகம் வந்தடைந்தார். மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் வெளியேறினார்.

#TamilSchoolmychoice

விசாரணைக்குப் பின்னர் காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அப்துல்லா, “மூன்று மணி நேரம் மிக நீண்ட நேரமாகும். நான் களைப்பாக இருக்கின்றேன். எல்லா கோணங்களிலும் அவர்கள் என்னைக் கேள்வி கேட்டார்கள். ஆனால், எந்த சட்டத்தின் கீழ் என்னை விசாரிக்கின்றார்கள் என்பது குறித்து அவர்கள் விளக்கவில்லை. என்ன நடந்தது எனக் கேட்டார்கள். அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்துள்ளேன். எனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கிறிஸ்துவ தேவாலயத்தின் பெண் மதபோதகர் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்றை வழங்கியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இன்று விசாரணையைத் தொடக்கியதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் சாமா மாட் தெரிவித்துள்ளார்.