Home இந்தியா நீதிக்காக லத்தியில் அடிவாங்கவும் தயார் – குஷ்பூ அதிரடி!

நீதிக்காக லத்தியில் அடிவாங்கவும் தயார் – குஷ்பூ அதிரடி!

673
0
SHARE
Ad

kushboo,சென்னை, ஏப்ரல் 23 – அதிமுக அரசைக் கண்டித்து நீதிக்காகப் போராட நான் தயாராக இருக்கிறேன். அதன் காரணமாக, காவல் துறையிடம் லத்தி அடி கிடைத்தாலும் சரி, சிறை செல்ல நேர்ந்தாலும் சரி அதற்கும் தயாராக உள்ளேன் என காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு சமீபத்தில் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குஷ்பூ அக்கட்சியினர் மத்தியில் பேசியதாவது:-

“காங்கிரஸ் நடத்தும் நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என யாரும் கருத வேண்டாம். காங்கிரசை வளர்க்கத் தான், நான் கட்சியில் இணைந்தேன். அதற்காக பாடுபட நான் எப்பொழுதும் தயாராக உள்ளேன்.”

#TamilSchoolmychoice

“அதிமுக அரசின் அராஜக ஆட்சியைக் கண்டித்து, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு, காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினால், அதில் கட்டாயம் நான் கலந்து கொள்வேன். அப்படி நடத்தப்படும் போராட்டத்திற்காக  காவல் துறையிடம் லத்தி அடி கிடைத்தாலும் சரி, சிறை செல்ல நேர்ந்தாலும் சரி அதற்கும் தயாராக உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பல வருடங்களாக இருந்தவர்களை விடுத்து ஆறு மாதத்திற்கு முன்பு கட்சியில் இணைந்த குஷ்பூவிற்கு அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பொதுக்கூட்டங்களில் குஷ்பூ தன்னை முன்னிலைப்படுத்தி பேசி வருவதும் அவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.