Home கலை உலகம் அஜீத் மகனுக்கு ‘ஆத்விக்’ என பெயர்!

அஜீத் மகனுக்கு ‘ஆத்விக்’ என பெயர்!

928
0
SHARE
Ad

ajith-f-600x300சென்னை, ஏப்ரல் 23 – கடந்த மார்ச் 2-ஆம் தேதி அஜித்-ஷாலினி தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததை முன்னிட்டு சமூக வலைகளில் ரசிகர்கள், பிரபலங்கள்  ‘குட்டித்தல’ என வார்த்தையில் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

அடுத்த கேள்வியாக அஜித் குழந்தைக்கு என்ன பெயர் என கேள்விகள் எழத் துவங்கியது. தற்போது அஜித்தின் மகன் பெயர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித், ஷாலினி தன் இரண்டாவது மகனுக்கு ‘ஆத்விக்’ என பெயரிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

kutty_thala_01’ஆத்விக்’ என்றால் ’தனித்துவமானவன்’ என அர்த்தமாம். இதை அறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். இதை முன்னிட்டு டுவிட்டரில் ரசிகர்கள் குட்டித்தல ’ஆத்விக் அஜீத்குமார்’ என வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.