Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளராக சுஹைமி சாபுடின் தேர்வு!

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளராக சுஹைமி சாபுடின் தேர்வு!

530
0
SHARE
Ad

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 23 – பெர்மாத்தாங் பாவ் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக சுஹைமி சாபுடின் (வயது 44) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று வெளியிட்டார்.

ba2e4bf307bf7317baef543fb7999e59

#TamilSchoolmychoice

இந்நிலையில், பிகேஆர் கட்சி அதன் வேட்பாளரை வரும் வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் 25-ம் தேதி பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும், மே 7-ம் தேதி வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஓரினப்புணர்ச்சி வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு எதிர்கட்சித் தலைவரும், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.