நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியின் போது அங்கித்தை கவுரவிக்கும் வகையில் அவரை 16-வது வீரராக கொல்கத்தா அணி அறிவித்திருந்தது.
அதோடு கொல்கத்தா அணி சார்பில் அங்கித்தின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும் நிதியுதவியாக அளிக்கப்பட்டது. கொல்கத்தா ஏடன் கார்டன் மைதானத்தில் அங்கித்தின் உருவப்படத்துக்கு நேற்று அஞ்சலி செலுத்தும் நிகச்சி நடைபெற்றது.
ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். கொல்கத்தா அணி தரப்பில் ,மரணமடைந்த அங்கித்தை நினைவு கூற எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுவதாக தெரிவிக்கப்பட்டது. மரணமடைந்த அங்கித் கேஷ்ரி 19 வயதுக்குட்பட்ட பெங்கால் அணியின் கேப்டனா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.