Home இந்தியா நிலநடுக்கத்தால் பாதித்தவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தந்தார் மோடி!

நிலநடுக்கத்தால் பாதித்தவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தந்தார் மோடி!

557
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, ஏப்ரல் 28 –  நேப்பாள் நிலநடுக்கத்தால் பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளார். நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவிலும் பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது ஒரு மாத சம்பளத்தை பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாக நேற்று வழங்கினார்.

#TamilSchoolmychoice

இதேபோல், தைனிக் சவீரா டைம்ஸ் என்ற பத்திரிகை வாசகர்கள் சார்பில் வழங்கப்பட்ட ரூ.2 கோடிக்கான காசோலையை, மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் விஜய் சம்ப்லா நேற்று பிரதமரிடம் வழங்கினார்.

இந்த பேரிடரில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.