Home நாடு மேலாடையை கழற்றிய பெண் மீது வழக்குப் பதிவு!

மேலாடையை கழற்றிய பெண் மீது வழக்குப் பதிவு!

739
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 28 – கடந்த வாரம் பொது இடத்தில் ஆடைகளைக் களைந்து சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்ட பெண் மீது குற்றியவில் சட்டப்பிரிவு 294-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Woman strips refusing to pay

பெர்சானா அவ்ரில் சொல்லுன்டா (வயது 32) என்ற அந்த பெண் அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வதோடு, ஸ்பாவிலும் பணியாற்றி வருகின்றார்.

#TamilSchoolmychoice

தன் மீதான குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ள மறுத்ததால், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரா ஸ்யாஸ்வீன் ஹமிசன், அடுத்த விசாரணையை வரும் மே 29-ம் தேதிக்கு நிர்ணயித்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாத சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படலாம்.

கடந்த வியாழக்கிழமை பெட்டாலிங் சாலையில் தான் சாப்பிட்ட உணவுக்கு 18 வெள்ளியை தர மறுத்த பெர்சானா, பொது இடத்தில் பலர் முன்னிலையில் திடீரென தனது மேலாடையை கழற்றி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த காட்சி காணொளியாக நட்பு ஊடகங்களிலும் பரவி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.