Home நாடு நேபாள நிலநடுக்கம்: சாமிவேலு 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கினார்!

நேபாள நிலநடுக்கம்: சாமிவேலு 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கினார்!

679
0
SHARE
Ad

samyvellபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 28 – நேப்பாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் சுமார் 4000-க்கும் (இன்றைய நிலவரப்படி) மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு நேற்று 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பிரதமர் துறையைச் சேர்ந்த இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்புத் துறையுடன் இணைந்து ஹோட் மீடியா தனியார் நிறுவனம், டீம் போரஸ் பாதுகாப்பு தனியார் நிறுவனம் மற்றும் மலேசிய மலையாளி சங்கம் ஏற்பாட்டில் நேபாளத்துக்கான பொருள் திரட்டும் நிகழ்ச்சி நேற்று பெட்டாலிங் ஜெயா டிரோபிகானாவில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

“இந்த திட்டத்தில், நிதி திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, மக்களுக்கு தேவையான அன்றாட பொருட்கள் திரட்டும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு தெரிவித்தார்.

அந்த வகையில், இந்நாட்டில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய, அவர்களுக்கு தேவையான கூடாரம், உடை, உணவு, தண்ணீர் என தங்களால் இயன்ற பொருட்களை வழங்கி உதவ முன் வர வேண்டும் உத்தாமா சாமிவேலு கேட்டுக்கொண்டார்.