Home இந்தியா வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் 9,000 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து – இந்திய மத்திய அரசு!

வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் 9,000 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து – இந்திய மத்திய அரசு!

710
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_35697138310புதுடெல்லி, ஏப்ரல் 28 – வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் சுமார் 9,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

அரசு சார்பற்ற நிறுவனங்கள் (Non Governmental Organisations) என்று அழைக்கப்படும் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று, இந்தியாவில் சேவை உள்ளிட்ட பல காரியங்களுக்காக அந்த நிதியை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் (Foreign Contribution Regulation) சட்டத்தை மீறியதற்காக சுமார் 9 ஆயிரம் அரசு சார்பற்ற நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த 2009-2010, 2010-2011 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்துமாறு 10 ஆயிரத்து 343 அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி மனு அனுப்பப்பட்டது.

ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்குமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனு அனுப்பப்பட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களில் வெறும் 229 அரசு சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே பதில் அளித்த நிலையில், எஞ்சிய 510 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட மனு திரும்பி வந்துள்ளது.

இதையடுத்து வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 8 ஆயிரத்து 975 அரச சார்பற்ற நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.