Home கலை உலகம் பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!

பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!

1016
0
SHARE
Ad

???????????????????????????சென்னை, ஏப்ரல் 29 – ’உள்ளம்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார்.

பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் அறியப்பட்ட இயக்குநர் அமீரின் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தேசிய விருதையும் வென்றார் பிரியாமணி.

அதைத்தொடர்ந்து தமிழ் , தெலுங்கு என பிரியாமணி பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளாராம்.

#TamilSchoolmychoice

தொழிலதிபரும், பிரியாமணியின் நீண்ட கால நண்பரும் ஆன முஸ்தபா ராஜை என்பவரை மணக்க இருக்கிறாராம்.  என்னை மிகவும் கவனமாகவும், அன்போடும் பார்த்துக் கொள்பவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறிய பிரியாமணி,

மலையாள பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில்; “தவறுகளை தைரியமாக ஒப்புக்கொள்ளும் குணமுடையவரையே நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன்”.

“இது மட்டும் அல்லாமல் எனது பிரச்சனை எதுவாக இருப்பினும் என்னுடன் நிழலாக நிற்பவர், நல்ல நகைச்சுவை குணம் அவரிடம் இருக்கிறது” என கூறியுள்ளாராம். சாந்தனு, திரிஷா,  இலியானா, தனன்யா என திருமணப் பட்டியலில் இப்போது பிரியாமணியும் இணைந்துள்ளார்.