Home இந்தியா ஆப்கான் மக்களுக்கு தோள் கொடுப்போம் – மோடி உறுதி!

ஆப்கான் மக்களுக்கு தோள் கொடுப்போம் – மோடி உறுதி!

606
0
SHARE
Ad

pti4_28_2015_000114bபுதுடெல்லி, ஏப்ரல் 29 – தீவிரவாதத்தை ஒடுக்கவும், வளர்ச்சி பணிகளை விரைவு படுத்தவும் ஆப்கானை அதன் வன்முறையிலிருந்து மீட்க அந்நாட்டு மக்களுக்கு தோள் கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும் என்றும் பிரதமர் மோடி கூரியுள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.

இருதரப்பு நல்லுறவு, அனைத்துலக விவகாரங்கள் பற்றி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மோடியும், அஷ்ரப் கானியும் இருநாட்டு நட்புறவு பற்றி விளக்கினர். ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று  மோடி  தெரிவித்தார்.