Home நாடு லீ சோங் வெய்-க்கு ஊக்கமருந்து பரிசளித்தது ‘முக்கியப் பிரமுகரின்’ மனைவி!

லீ சோங் வெய்-க்கு ஊக்கமருந்து பரிசளித்தது ‘முக்கியப் பிரமுகரின்’ மனைவி!

921
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 29 – மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வெய்-க்கு மூலிகை வகையிலான ஊக்கமருந்தை வழங்கியது ஒரு முக்கியப் பிரமுகரின் மனைவி என தெரியவந்துள்ளது.

lee chong wei

அனைத்துலக பூப்பந்து சம்மேளனம் ( Badminton World Federation) வெளியிட்டுள்ள 12 பக்க அறிக்கையில், கார்டிசெப்ஸ் (cordyseps) என்ற ஊக்க மருந்தை மாத்திரைகளாகத் தயாரித்து விற்கும் கோலாலம்பூரில் உள்ள கடை ஒன்றில் இருந்து அதை வாங்கி முக்கியப் பிரமுகரின் மனைவி ஒருவர் சோங் வெய்க்கு பரிசளித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தினமும் காலையில் இரண்டு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் லீ சோங் வெய்-க்கு அவர் அறிவுறுத்தியுள்ளார் என்றும், அப்பெண்ணின் பெயரை கேமரா முன் வெளியிட்டால் அவருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்பதால் லீ சொங் வெய் பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகின்றது.

“அவ்வளவு முக்கிய நிலையில் உள்ள ஒரு விளையாட்டு வீரர், இது போன்ற கோரிக்கைகளில் அலட்சியமாக காட்டாமல், அதை தவிர்த்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.”

“லீ சோங் வெய் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தாலும், அவர் எதிர்பார்க்கப்படும் அளவில் எச்சரிக்கையுடன் இல்லை”

மேலும், “லீ தேவையில்லாமல் இந்த  சிக்கலில் தானாக மாட்டிக் கொண்டு பல வருடங்களாக தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டு வந்திருக்கின்றார்” என அனைத்துலக பூப்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.