Home இந்தியா நியூயார்க் குற்றவியல் நீதிபதியாக சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி பொறுப்பேற்றார்!

நியூயார்க் குற்றவியல் நீதிபதியாக சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி பொறுப்பேற்றார்!

601
0
SHARE
Ad

Raja-Rajeswariநியூயார்க், ஏப்ரல் 29 – சென்னையில் பிறந்து தனது 16-ஆவது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவரான ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இன்று பொறுப்பேற்றார்.

இதன் மூலம் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நீதிபதியாக பதவி ஏற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் அடைந்துள்ளார்.

தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி, ரிச்மாண்ட் கவுண்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

#TamilSchoolmychoice

Raja-Rajeswari-New-York-First-Indian-Female-Judgeஅவரை நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ரிச் மாண்ட் கவுண்டி மேயரான பில் டி பிளாசியோ பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து, சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மேலும் 27 நீதிபதிகளுடன்  நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராஜேஸ்வரி நேற்று பொறுப்பேற்றார்.

நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றது குறித்து அவர் கூறுகையில்; “இது கனவு போல தோன்றுகிறது. நான் நினைத்ததை விட, மிகப்பெரிய பதவி கிடைத்துள்ளது என்றார்”.

raja-rajeswari-l“இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த எனக்கு, இப்பதவியை தந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ள ராஜேஸ்வரி. இவர்,கடந்த 16 ஆண்டுகளாக ரிச்மாண்ட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் பங்கேற்றுள்ள ராஜேஸ்வரி பரத நாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனங்களை அரங்கேற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.