கொழும்பு, ஏப்ரல் 29 – இலங்கை அதிபரின் அதிகாரஙகளை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அரசியல் சாசனத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் இலங்கை அதிபரின் அதிகாரங்களை பெருமளவு குறைப்பது, காவல்துறை, நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவது உள்ளிட்ட அரசியல் சாசன 19-வது திருத்த மாசோதா கொண்டுவரப்பட்டது.
பெரும் அமளிக்கிடையே பெருமளவு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி ஒருவர் இரண்டு முறைக்குமேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் அதிபரின் பதவி காலம் 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தை கலைக்கவும் தடைவிதிக்கவும் அந்த மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.