Home நாடு அரசாங்கத்தின் உருமாற்றுத்திட்டம் நல்ல பலன் – நஜிப் பெருமிதம்!

அரசாங்கத்தின் உருமாற்றுத்திட்டம் நல்ல பலன் – நஜிப் பெருமிதம்!

679
0
SHARE
Ad

najib-tun-razakகோலாலம்பூர், ஏப்ரல் 30 – ஒரு புறத்தில் தன்னை நோக்கிப் பாயத் தொடங்கியிருக்கும் அரசியல் எதிர்ப்புக் கணைகளை சமாளிக்கும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (28 ஏப்ரல்) இரவு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக், அரசாங்க உருமாற்றுத் திட்டங்கள் வெற்றியளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் 1எம்டிபி பிரச்சனை குறித்தும் – நாடே எதிர்பார்த்துக் கிடக்கும் கேள்விகளுக்கும் – நஜிப் எந்தவித பதில்களையும் வழங்கவில்லை.

ஜி.டி.பி. (GTP) எனப்படும் அரசாங்கத்தின் உருமாற்றுத் திட்டமும் இ.டி.பி என்ற பொருளாதார உருமாற்றுத் திட்டமும் மக்களுக்கு சிறந்த பலனைத் தந்துள்ளன, இந்த உருமாற்றுத் திட்டங்களின் முக்கிய அம்சங்களின் இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என நஜிப் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, குற்றச் செயல்களை குறைப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, நிதிப் பற்றாக்குறையை குறைப்பது போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

மேலும், 2020-ஆம் ஆண்டுக்குள் உயர் வருமானம் கொண்ட நாடாக மலேசியா திகழ்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கும் தாம் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க உறுமாற்றுத் திட்டம் மற்றும் பொருளாதார உருமாற்றுத் திட்டத்தின் அறிக்கையை தொலைக்காட்சி உரை வழி வெளியிட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

2010-ஆம் ஆண்டு முதல் சுமார் 18 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் வரை வேலையில்லா விகிதம் 3 விழுக்காடு குறைந்துள்ளது. மேலும், தனி நபரின் மொத்த ஆண்டு வருமானம் 10,426 டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் தனியார் முதலீடுகள் 13.9 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் 68 இலட்சம் குடும்பத் தலைவர்கள் அல்லது தனிநபருக்கு 3.6 பில்லியன் வெள்ளி விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் நஜிப் தெரிவித்தார்.