Home தமிழ் “த்ரிஷாவின் திருமண முறிவு உண்மை தான்” – த்ரிஷாவின் தாயார் பேட்டி!

“த்ரிஷாவின் திருமண முறிவு உண்மை தான்” – த்ரிஷாவின் தாயார் பேட்டி!

801
0
SHARE
Ad

trishaசென்னை, மே 6 – நடிகை த்ரிஷா மற்றும் தயாரிப்பாளர் வருண்மணியனின் திருமணம் நின்று போனது குறித்து, கடந்த சில நாட்களாக ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், பிரபல தமிழ் வார இதழ் ஒன்றிற்கு த்ரிஷாவின் தாயார் உமா அளித்துள்ள பேட்டியில், அதனை உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

“த்ரிஷாவின் திருமணம் தொடர்பாக பலர் பல்வேறு விதமாகப் பேசி வருகின்றனர். இது த்ரிஷாவின் வாழ்வு குறித்த மிக முக்கியமான விஷயம் என்பதால் தான், இதுவரை வாய் திறக்காமல் இருந்தேன். த்ரிஷா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பது வருண் மணியனுக்குப் பிடிக்காததால் தான், பிரிந்தனர் என்று கூறுகின்றனர்.இதில் துளியும் உண்மை இல்லை.”

#TamilSchoolmychoice

“த்ரிஷா பல வருடங்களாக நடிப்பது தெரிந்துதான் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். த்ரிஷா, நடிப்பதை அவர்கள் பெருமையாகத் தான் நினைத்தனர். இருந்தும், இந்த திருமணம் நின்று போனதற்கு பலர் காரணமாக உள்ளனர். அவர்கள் குறித்து நான் வெளிப்படையாகப் பேச முடியாது. அவர்கள் மீது நான் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் எல்லாவற்றையும் வாய் திறந்து பேசுவது நாகரீகம் கிடையாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.