சுலு சுல்தான் படையினர் பதுங்கியுள்ள கம்போங் தண்டுவோவில் இன்று மலேசிய படையினர் குண்டு வீசி தாக்குதலைத் தொடங்கியதும் 100க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மலேசிய தூதரகத்திற்கு முன் திரண்டனர் என்ற தகவலை ஏ.என்.எஸ்.சி.பி.என் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்களில் ஒருசிலர் நேரடியாகவே சுலு சுல்தான் படையினருக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் சுலு சுல்தான் படையினரைத் ‘தியாகிகள்’ என்று வர்ணிப்பதைப் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை தங்கள் கைகளில் வைத்திருந்தனர். மற்ற சில பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சபாவில் அமைதி நிலவ வழி செய்யுமாறு பிலிப்பினோ அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டனர்.
நண்பகலில், ஆர்ப்பட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர். ஆனால் இது போன்று ஆர்பாட்டங்கள் மேலும் தொடரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.இந்த பதட்டமான சூழ்நிலை காரணமாக மலேசிய தூதரகம் இன்று மூடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பிற்காக 50 காவல்துறையினர் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.