Home உலகம் போதைப் பொருள் எதிர்ப்பிற்கான தூதுவராக ஜாக்கி சானை நியமித்தது சிங்கப்பூர்!

போதைப் பொருள் எதிர்ப்பிற்கான தூதுவராக ஜாக்கி சானை நியமித்தது சிங்கப்பூர்!

917
0
SHARE
Ad

jackiechanசிங்கப்பூர், மே 7 – அதிரடி மன்னன் ஜாக்கி சானை, போதைப் பொருள் எதிர்ப்பிற்கான தூதுவராக சிங்கப்பூர் அரசு நியமனம் செய்துள்ளது. ஒழுக்கமான வாழ்க்கை முறையாலும், திறமையான நடிப்பாலும் இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் ஜாக்கி, இந்த புதிய பதவி மூலம் பல இளைஞர்களை நல்வழிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

61-வயதான ஜாக்கி சான், இன்று சிங்கப்பூரின் நன்யாங் பல்தொழில்நுட்பக் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு போதைப் பொருள் தடுப்பிற்கு எதிரான செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தினார். அதன் பின்பு அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

“எனது மகன் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக சிறை சென்ற பொழுது நான் பெரிதும் அவமானப்பட்டேன். எனினும், இந்த சம்பவம் என்னை இந்த விவகாரத்தில் தீர்க்கமாக யோசிக்க வைத்தது. போதைப் பொருளினால் எனது குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டது என்பதை என்னால் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியும்.”

#TamilSchoolmychoice

“நீங்கள் எப்பொழுதும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். போதைப்பொருளும், சூதும் உங்களை மட்டுமல்லாது உங்கள் குடும்பத்தையே அழித்து விடும்” என்று அவர் கூறியுள்ளார்.

ஜாக்கி சான் நியமனம் குறித்து சிங்கப்பூர் உள்துறை இணையமைச்சர் கூறுகையில், “ஜாக்கி சானை, போதைப் பொருள் எதிர்ப்பிற்கான தூதுவராக இருக்க முடியுமா என்று கேட்டவுடன் எந்தவொரு தயக்கமும் இன்றி ஒப்புக் கொண்டார். அவர் பல இளைஞர்களுக்கு எப்பொழுதும் முன்னுதாரணமாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

ஜாக்கி சான், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் தூதுவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.