Home உலகம் “நடுத்தெருவில் நிற்கிறேன்” – பெற்றோரைக் குறை கூறுகிறார் ஜாக்கி சான் மகள்!

“நடுத்தெருவில் நிற்கிறேன்” – பெற்றோரைக் குறை கூறுகிறார் ஜாக்கி சான் மகள்!

1165
0
SHARE
Ad

ஹாங் காங் – நடிகர் ஜாக்கி சானின் மகளான எட்டா நங், வீடு இல்லாமல் தனது பெண் தோழியுடன் நடுத்தெருவில் நிற்பதாக யுடியூபில் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் ஹாங் காங் அழகி எலைன் நங்கிற்கும், ஜாக்கிசானுக்கும் பிறந்தவரான எட்டா நங், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என வெளிப்படையாக அறிவித்தார்.

அதற்கு முன்னர், கடந்த 2017 மார்ச் மாதம், தனது தாயார் எலைன் நங்கை கிரிமினல் வழக்கு ஒன்றிற்காக காவல்துறை விசாரணை செய்யவே, காவல்துறையுடன் தகராறு செய்து கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

பின்னர் 2 மாதங்கள், மன நிலை சார்த்த பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, யுடியூப்பில் எட்டா நங் வெளியிட்டிருக்கும் காணொளியில், “ஹாய், நான் ஜாக்கி சானின் மகள். இவள் என்னுடைய பெண் தோழி அண்டி. நாங்கள் இருவரும் வீடு இன்றி கடந்த சில மாதங்களாக நடுத்தெருவில் நிற்கிறோம். ஓரினச்சேர்க்கையாளரை வெறுக்கும் எனது பெற்றோர் காரணமாக எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை. நாங்கள் ஃபேஸ்புக், காவல்துறை, ஓரினச்சேர்க்கையாளர் சங்கம் எனப் பல வழிகளில் உதவி கேட்டுப் பார்த்துவிட்டோம். யாரும் எங்களுக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 64 வயதான ஜாக்கி சானுக்கு கடந்த 1982-ம் ஆண்டு, ஜோன் லின் என்பவருடன் திருமணம் நடைபெற்று, அத்தம்பதிக்கு ஜேய்சி (வயது 32) என்ற மகன் இருக்கிறார்.

ஜேய்சி சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறைக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.