Home Featured கலையுலகம் ஜாக்கிசானுக்கு கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது!

ஜாக்கிசானுக்கு கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது!

1173
0
SHARE
Ad

jackie-chanலாஸ் ஏஞ்சல்ஸ் – உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு, கடந்த சனிக்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 8-வது ஆளுநர்கள் விருது விழாவில், கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற மகிழ்ச்சியில் ஜாக்கி சான் உரையாற்றுகையில், “திரைத்துறையில் 56 வருடங்களாக இருந்து, 200 திரைப்படங்கள் நடித்து, என்னுடைய பல எலும்புகளை உடைத்த பின்னர், கடைசியாக இது எனக்கு (கௌரவ ஆஸ்கார்) கிடைத்திருக்கிறது”

“ஹாங் காங், நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். அற்புதமான நகரம். நான் பிறந்து வளர்ந்த ஊர். என்னை உருவாக்கிய நகரம். சீனா தான் என்னுடைய நாடு, நான் சீனராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மிக்க நன்றி ஹாலிவுட். எனக்கு இத்தனை ஆண்டுகளாகப் பலவற்றைக் கற்றுக் கொடுத்து வருகின்றீர்கள். அதேநேரத்தில் என்னைக் கொஞ்சம் பிரபலமாக்கினீர்கள். நான் இங்கு நிற்பதில் பெருமை கொள்கிறேன்” என்று ஜாக்கிசான் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.