Home Featured நாடு ஜமால் தாக்கப்பட்டார் – மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது!

ஜமால் தாக்கப்பட்டார் – மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது!

800
0
SHARE
Ad

jamalகோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, அம்பாங் பாய்ண்ட் வணிக வளாகத்தில் நடந்த கைகலப்பில் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் மொகமட் யூனோஸ் முகத்தில் தாக்கப்பட்டார்.

வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பெர்சே பேரணியை விளம்பரப்படுத்தும் நோக்கில் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா கமாருடின் மற்றும் பிகேஆர் உறுப்பினர்கள் நேற்று அம்பாங் பாய்ண்ட் வணிக வளாகம் வருவதாகத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவர்களைத் தடுக்கும் நோக்கில் அங்கு ஜமால் தலைமையிலான சிவப்புச் சட்டை அணியினர் அங்கு கூடியிருந்தனர்.அங்கு பாதுகாப்பிற்கு காவல்துறையினரும் இருந்தனர்.

#TamilSchoolmychoice

அப்போது, ஜுரைடா கமாருடின் அணியினர் அங்கு வந்த போது ஏற்பட்ட கைகலப்பில் ஜமால் தன்னை காவல்துறைத் தாக்கியதாகக் கத்தினார்.

எனினும், அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஜுரைடாவின் ஆதரவாளர்களில் ஒருவர் தன்னைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.

தான் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் திரும்ப பதிலடி கொடுப்பேன் என்றும் ஜமால் சவால் விடுத்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஜமாலின் மூக்கில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது குறிப்பிடத்தக்கது.