வாஷிங்டன் – அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு பெற்று டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணிகளில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
சுகாதாரத் துறைக்கு முன்னாள் அமெரிக்க மாநில ஆளுநரான போலி ஜிண்டாலை நியமிக்க டிரம்ப் பரிசீலித்து வருகின்றார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு தவணைகள் லூயிசியானா மாநில ஆளுநராகப் பதவி வகித்த ஜிண்டால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றவர்.
அவர் டிரம்ப் அமைச்சரவையில் இடம் பெற்றால், அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சர் என்ற பெருமையைப் பெறுவார்.