இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறியிருப்பதாவது: “இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முன்பாக, தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது”.
“இதன்படி, தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசார தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு, கலப்பு விகிதாசார முறையைக் கடைப்பிடிக்கும் வகையில் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்யப்படவுள்ளது”.
“இந்தத் திருத்தம் நிறைவேறினால், சிறிய கட்சிகள், சிறுபான்மையினருக்கான கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்.”
“இலங்கையில் தற்போதுள்ள நாடாளுமன்ற அமைப்பை மாற்றிவிட்டு, மேற்கத்திய பாணியிலான நாடாளுமன்ற அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது”.
“இதன்படி, தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு பிரதமர் பதவியும், 2-ஆவது இடத்தில் வரும் கட்சிக்கு துணைப் பிரதமர் பதவியும் கிடைக்கும். அப்படி அமையும்போது, அது தேசிய அரசாங்கமாக இருக்கும்” என அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்தார்.