Home கலை உலகம் திருமணம் நின்றதால் தனியாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளேன் – டுவிட்டரில் திரிஷா!

திருமணம் நின்றதால் தனியாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளேன் – டுவிட்டரில் திரிஷா!

951
0
SHARE
Ad

trisha_beautiful-1920x1080சென்னை, மே 8 – ஆமாம், நான் இப்போது தனியாகத்தான் உள்ளேன். சந்தோஷமாக இருக்கிறேன். இனி யூகமாக எதையும் பேச, எழுத வேண்டாம், என்று நடிகை திரிஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

திரிஷா – வருண் மனியம் திருமணம் கடந்த வாரம் நின்றது. ஆனால் திரிஷாவோ இதுபற்றி கவலைப்படாமல், புதுப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

தமிழில் எந்த முன்னணி நடிகைக்கும் வராத அளவுக்கு பெரிய வாய்ப்புகள் அவருக்கு வருகின்றன. திரிஷா – வருண் மனியம் திருமண ரத்தை திரிஷாவின் அம்மாவும் உறுதிப்படுத்திவிட்டார்.

#TamilSchoolmychoice

விருப்பமில்லாத திருமணத்தைச் செய்து கொண்டு எதற்காக மனம் வருந்த வேண்டும்? என்று திரிஷாவின் அம்மா கேட்டிருந்தார். இந்த நிலையில், இதுவரை அமைதியாக இருந்த திரிஷா, திருமணம் ரத்தானதை வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.

trishaஇது குறித்து திரிஷா டுவிட்டரில் கூறியிருப்பதாவது; “வெளியாகிக் கொண்டிருக்கும் பல்வேறு யூகச் செய்திகள் போதும். ஆமாம், நான் தனியாகத்தான் இருக்கிறேன்”.

“போதும் விட்டுவிடுங்கள். தனியாக இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறேன். நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.  திருமண ரத்து குறித்து முதல் முறையாக திரிஷா ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.