Home நாடு நஜிப் – மொய்தீன் மோதல் அம்பலத்திற்கு வந்தது! 1எம்டிபியால் சர்ச்சை

நஜிப் – மொய்தீன் மோதல் அம்பலத்திற்கு வந்தது! 1எம்டிபியால் சர்ச்சை

769
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 9 – பிரதமர் நஜிப் தலைமைத்துவம் மீதான எதிர்ப்புகள் வலுத்து வரும் வேளையில், அதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்னோ தலைமைத்துவத்தைக் கைப்பற்ற துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் முன்வருவாரா என்ற கேள்விதான் அம்னோவில் இதுநாள்வரை பரவிக் கிடந்தது.

Tan-Sri-Muhyiddin-Yassin3இப்போது அதற்கு விடை கிடைத்து விட்டது போல் தோன்றுகின்றது. இதுவரை நஜிப் தலைமைத்துவம் மீது தனது சொந்தக் கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்காத மொய்தீன், இப்போது முதன் முறையாக நஜிப் மீதான எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார்.

1எம்டிபி நிறுவனத்தை அரசாங்கம் கையாள்வது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் அவர், இதனால் நிலவும் அதிருப்தி இது பெரிய விவகாரமாக வெடிக்கலாம் என எச்சரித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் ஏற்பட்ட தோல்விக்கும் 1எம்டிபி பிரச்சனைதான் மிக முக்கியமானக் காரணம் என்று மொய்தீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

1 MDB POSTER“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 1 எம்டிபி பற்றி துன் மகாதீர் மட்டும் கேள்வி எழுப்பவில்லை. மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். ஏன் ஒருவரும் இதுவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை? ஏன் அதன் நிர்வாக வாரியம் இன்னும் கலைக்கப்படவில்லை? தலைமைச் செயல் அதிகாரி மற்றும் அதன் ஆலோசகரான பிரதமர் நஜிப்பின் நிலைமை என்ன? என்றெல்லாம் மக்களிடையே கேள்விகள் நிறைந்திருக்கின்றன” என இத்தாலியின் மிலான் நகருக்கு அலுவல் நிமித்தம் வருகை தந்துள்ள மொய்தீன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது கூறினார்.

விஷத்தன்மை வாய்ந்த இந்த சர்ச்சை மக்களை மட்டும் பாதிக்காமல் அம்னோவையும் பாதிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் பணம் 1எம்டிபியைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படாது என மொய்தீன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்றாலும் இப்போதுதான் முதன்முறையாக எதிர்மறையான கருத்தினை வெளியிட்டிருக்கின்றார்.

அரசாங்கத் துணை நிறுவனங்களில் ஒன்றான தாபோங் ஹாஜி எனப்படும் மெக்கா புனிதப்பயணத்திற்கான சேமிப்பு நிதி வாரியம் அண்மையில் 1எம்டிபி மேம்பாட்டுத் திட்ட நிலமொன்றை 188.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கியுள்ளது தொடர்பில் துன் மகாதீர் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார்.