Home மலேசியா மலேசியாவில் முதலீட்டை அதிகரிக்க இத்தாலிய எண்ணெய் நிறுவனம் முடிவு!

மலேசியாவில் முதலீட்டை அதிகரிக்க இத்தாலிய எண்ணெய் நிறுவனம் முடிவு!

625
0
SHARE
Ad

TAN SRI MUHYIDDIN YASSINமிலன், மே 10 – இத்தாலியின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், மலேசியாவில் வழக்கத்தை விட கூடுதலாக  300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் தெரிவித்துள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்கள், நேற்று முன்தினம் துணைப் பிரதமர் மொய்தீன் யாசினை சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பின் போது, மலேசியா-இத்தாலி இடையே வர்த்தக ரீதியான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன்பின்பு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த மொய்தீன், மலேசியா-இத்தாலி நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த வர்த்தகம் தொடர்பாக அவர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“இத்தாலியின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், வழக்கமாக செய்யும் முதலீடுகளை விட 300 மில்லியன் டாலர்களை கூடுதலாக முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போது அந்நிறுவனம், மலேசியாவின் பெட்ரோனாஸுடன் கூட்டு வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றது.”

“அதேபோல், இத்தாலியின் அகஸ்டா எனும் ஹெலிகாப்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் ‘ஆசியன்’ (ASEAN) சந்தைகளில் வர்த்தகம் செய்ய ஆர்வமாக இருகின்றது. இது போன்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சாத்தியமானால், இரு நாடுகளின் வர்த்தக உறவுகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.