Home நாடு சர்ச்சைக்குரிய 1எம்டிபி நிலத்தை விற்று விடுங்கள் – தாபோங் ஹாஜிக்கு நஜிப் அறிவுரை

சர்ச்சைக்குரிய 1எம்டிபி நிலத்தை விற்று விடுங்கள் – தாபோங் ஹாஜிக்கு நஜிப் அறிவுரை

551
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 10 – 1எம்டிபி மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து 188.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்பட்ட நிலத்தை விற்பது என தாபோங் ஹாஜி எனப்படும் மெக்கா புனிதப் பயணத்திற்கான சேமிப்பு நிதி வாரியம் முடிவு செய்துள்ளது.

Datuk-Abdul-Azeez-Abdul-Rahimஇது தொடர்பான சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பிரதமரின் அறிவுறுத்தல்படி தாங்கள் செயல்படுவதாக இந்த நிதி வாரியத்தின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அசீஸ் அப்துல் ரகீம் (படம்) கூறியுள்ளார்.

“தற்போது மூன்று தரப்பினர் அந்நிலத்தை கேட்டுள்ளனர். எங்களது முடிவை அடுத்த வாரம் அறிவிப்போம்,” என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அப்துல் அசீஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மூன்று தரப்பினருமே குறைந்தபட்சம் 188.5 மில்லியன் ரிங்கிட் தர முன்வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தங்களுக்கு குறைந்தபட்சம் 5 மில்லியன் ரிங்கிட் லாபம் தரக்கூடியவரிடமே நிலத்தை விற்கப் போவதாகக் கூறினார்.

பிரதமரிடம் இருந்து தங்களுக்கு வந்திருப்பது வெறும் அறிவுரைகள் மட்டுமே என்றும், உத்தரவுகள் அல்ல என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார். அடுத்த இரு வாரங்களில் நில விற்பனை நடவடிக்கை முடிவுக்கு வரும் என்றார் அவர்.

குறிப்பிட்ட நிலத்தை தங்கள் வசம் வைத்திருக்கவே நிதி வாரியம் தொடக்கத்தில் விரும்பியதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு விவகாரங்களை தாம் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.

1எம்டிபியை காப்பாற்றும் நோக்கத்திலேயே குறிப்பிட்ட நிலம் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்களை அப்துல் அசீஸ் திட்டவட்டமாக மறுத்தார்.