Home நாடு பங்சாரில் பால்கனியில் உடலுறவு: தம்பதியர் மீது காவல்துறை விசாரணை!

பங்சாரில் பால்கனியில் உடலுறவு: தம்பதியர் மீது காவல்துறை விசாரணை!

930
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 13 – தலைநகர் பங்சாரிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் மாடப் பகுதியில் (பால்கனி) அடையாளம் தெரியாத தம்பதியர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

balcony1305

விசாரணை நடத்துவது குறித்து பிரிக்பீல்ட்ஸ் ஓசிபிடி துணை ஆணையர் முகமட் அஸ்லி அப்துல்லாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த தம்பதி உடலுறவு கொள்ளும் காட்சியை மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் காணொளியாகவும் புகைப்படங்களாகவும் பதிவு செய்து நாளேடு ஒன்றுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் காணொளியில் சுமார் 30 நிமிடங்களுக்கு காட்சிகள் பதிவாகியிருப்பதாகக்
கூறப்படுகின்றது.

அந்தக் காணொளியை பதிவு செய்தவர், அத்தம்பதியரின் இந்த தகாத செயலை
வன்மையாகக் கண்டித்துள்ளார். எனினும் இந்த காணொளியும், புகைப்படங்களும்
எப்போது எடுக்கப்பட்டன என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

“குறிப்பிட்ட அத்தம்பதியர் சிறிதளவேனும் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்.
இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது,” என மசீசவின் பொதுச் சேவை மற்றும்
புகார் பிரிவு தலைவர் டத்தோஸ்ரீ மைக்கேல் சோங் கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காணொளியை பதிவு செய்தவர் அல்லது அத்தம்பதியர் வசிக்கும்
அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகம் இந்த அநாகரிக செயல் குறித்து
காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இதன்
மூலம் அத்தம்பதியர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியுள்ளார்.