Home நாடு நஜிப் பதவி விலகக் கூடாது – ஹாடி அவாங் கருத்து

நஜிப் பதவி விலகக் கூடாது – ஹாடி அவாங் கருத்து

620
0
SHARE
Ad

கோலதிரங்கானு, மே 13 – நியாயமான நடைமுறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர் என்பதால் பிரதமர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நஜிப் விலகக் கூடாது என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.

Hadi Awang PAS President

தாம் எதிர்கொள்ளும் அழுத்தங்களை முறியடித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண
அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் ஹாடி அவாங் வலியுறுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

“பதவி விலகப் போவதில்லை என்று அறிவித்துள்ள நஜிப்பின் கருத்தை நான்
ஏற்கிறேன். அவர் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிக்க வாய்ப்பளிக்க
வேண்டும்,” என்று செவ்வாய்க்கிழமை ஹாடி அவாங் தெரிவித்தார்.

1 எம்டிபி உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள சர்ச்சைகள் காரணமாக நஜிப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவது அர்த்தமற்றது என்றார் அவர்.

“நாம் ஆரோக்கியமானதொரு ஜனநாயக வழிமுறையை பின்பற்ற வேண்டும். பதவி விலகுமாறு பிரதமருக்கு அழுத்தம் கொடுப்பது வெட்கக் கேடானது. இதற்கு முன்பு பிரதமராக பதவி வகித்தவர்களுக்கும் இத்தகைய அழுத்தங்கள்
ஏற்பட்டுள்ளன.”

“இது ஒன்றும் புதிதல்ல. 1 எம்டிபி விவகாரத்திற்கு முன்பு பெர்வாஜா, போர்ட் கிள்ளான் ஃப்ரீ ஸோன் Port Klang Free Zone (PKFZ) ஆகியவை தொடர்பாகவும் பிரச்சினைகள் எழுந்துள்ளன,” என்று ஹாடி அவாங் சுட்டிக் காட்டினார்.