இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாளிதழ்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஈராக், சிரியா போன்ற நாடுகளில் வேரூன்றி உள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், இன்று கராச்சியில் நடைபெற்ற பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தினர் துண்டுப்பிரசுரம் மூலம் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பாகிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அந்நாட்டு அரசு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், கராச்சி தாக்குதலுக்கு மோடி, நவாஷ் ஷெரிப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.