Home உலகம் பாதுகாப்பு அமைச்சருக்கே மரண தண்டனை – வட கொரியா அதிரடி!

பாதுகாப்பு அமைச்சருக்கே மரண தண்டனை – வட கொரியா அதிரடி!

824
0
SHARE
Ad

461037_1280x720பியாங்யாங், மே 13 – சர்ச்சைகளுக்கும், அதிரடிகளுக்கும் பஞ்சமில்லாத வட கொரியா, தங்கள் நாட்டு பாதுகாப்பு அமைச்சருக்கே மரண தண்டனை நிறைவேற்றி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹியோன் யோங்-சோல்.இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி தலைநகர் பியாங்யாங்கில் பொதுமக்கள் முன்னிலையில் விமான எதிர்ப்பு துப்பாக்கி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹியோன், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு விசுவாசமாக இல்லை என்ற காரணத்தால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தண்டனை நிறைவேற்றப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு இந்த தகவலை தென் கொரியாவின் தேசிய உளவுத்துறை அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் துணை இயக்குனரான ஹான் கி பியோம் கூறுகையில், “ஹியோன் யோங்கிற்கு மரண தண்டனை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் ஆயுத படையின் அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹியோன், இராணுவ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு மரியாதை அளிக்கவில்லை என்றும், அதிபரின் கேள்விக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.