Home உலகம் உணவுக்கான போராட்டத்தில் 100 அகதிகள் கொல்லப்பட்டனரா?

உணவுக்கான போராட்டத்தில் 100 அகதிகள் கொல்லப்பட்டனரா?

531
0
SHARE
Ad

refugeeஜகார்த்தா, மே 18 – இந்தோனேசிய கடற்பரப்பில் 677 பயணிகளுடன் மூழ்கிக் கொண்டிருந்த படகு ஒன்று, சமீபத்தில் அந்நாட்டு மீனவர்களால் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட படகில் மியான்மர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், படகில் இருந்த உணவை யார் சாப்பிடுவது என்பதற்காக நடந்த மோதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பிபிசி பத்திரிக்கையில் வெளியாகி உள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக இந்தோனேசிய மீட்புக் குழு வட்டாரத்தில் கூறப்படுவதாவது:-

#TamilSchoolmychoice

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் 5 கடத்தல் படகில் தென் கிழக்கு ஆசிய கடல் பகுதியில் உள்ள நாடுகளில் தஞ்சம் புகுவது என்ற முடிவில் மியான்மர் மற்றும் வங்கதேசத்தை விட்டு வெளியேறி உள்ளனர். கடத்தல்காரர்கள்  கைவிட்டதால் சுமார் 2 மாத காலங்களாக படகு கடற்பரப்பிலேயே தத்தளித்துள்ளது. இந்நிலையில், படகில் உணவுப் பற்றாக்குறை ஏற்படவே, யார் உணவைப் பெறுவது என்று ஆரம்பித்த போராட்டம் பெரும் மோதலாக வெடித்துள்ளது.”

உணவிற்காக பலர் கத்திகளால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான், அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்படுகிறது.

அகதிகள் கூறுவதில் உண்மை இருப்பதாகவே இந்தோனேசிய வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படி, உணவிற்காக 100 பேர் கொல்லப்பட்டது உண்மை எனில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

மியான்மர் அரசு, படகில் அகதிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலுக்கு தாங்கள் பொறுப்பாக முடியாது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.