Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவின் புதிய விமான போக்குவரத்துச் சட்டம் – ஏர் ஏசியா அதிருப்தி!

இந்தியாவின் புதிய விமான போக்குவரத்துச் சட்டம் – ஏர் ஏசியா அதிருப்தி!

635
0
SHARE
Ad

Mittu_Chandilyaபுது டெல்லி, மே 18 – அனைத்துலக விமான போக்குவரத்தில் இந்தியா கொண்டு வந்துள்ள 5/20 சட்டம் தெளிவற்ற நிலையில் இருப்பதால், விரிவாக்க யோசனைகளை குறைத்துக் கொள்ள இருப்பதாக ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய சட்டம் தொடர்பாக தேவையான விளக்கங்களையும் இந்திய அரசு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

உள்நாட்டு விமான போக்குவரத்துகளை செய்து வரும் விமான நிறுவனங்கள், அனைத்துலக விமான போக்குவரத்திற்கு முன்னேற வேண்டுமானால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவமும், 20 விமானங்களையும் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய அரசு சட்டம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.

ஏற்கனவே இந்த சட்டத்திற்கு ஏர் ஏசியா கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ள நிலையில், தெளிவற்றதாக இருக்கும் இந்த சட்டத்தில் மற்றம் கொண்டு வரும் வரை, ‘ஒரு மாதத்திற்கு ஒரு விமான’ என்ற விரிவாக்க நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள இருப்பதாக ஏர் ஏசியா இந்தியா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மிட்டு சாண்டில்யா கூறுகையில், “இந்திய விமான போக்குவரத்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனினும், புதிய சட்டங்கள் சற்றே நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. அதனால் நாங்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்துள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய விமான சட்டத்திற்கு ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டஸும், ஏற்கனவே கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.