Home நாடு ‘தி சன்’ நாளிதழுக்கு எதிரான அவதூறு வழக்கில் இப்ராகிம் அலி தோல்வி!

‘தி சன்’ நாளிதழுக்கு எதிரான அவதூறு வழக்கில் இப்ராகிம் அலி தோல்வி!

714
0
SHARE
Ad

ஷா ஆலம், மே 18 – ‘தி சன்’ நாளிதழ் மற்றும் அதன் ஆசிரியர் குழுவுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் பெர்காசா தலைவர் டத்தோ இப்ராகிம் அலி தோல்வியை சந்தித்துள்ளார்.

ibrahim-ali

கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி அந்த நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் தன்னைப் பற்றிய அவதூறான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததாகக் கூறி, ‘தி சன்’ நாளிதழ், முன்னாள் தலைமை நிர்வாகி சோங் செங் ஹாய், எழுத்தாளர் பெர்னாண்டஸ் மற்றும் சன் மீடியா கார்பரேசன் ஆகியவற்றின் மீது 5 மில்லியன் ரிங்கிட்டிற்கு அவதூறு வழக்குத் தொடுத்தார் இப்ராகிம் அலி.

#TamilSchoolmychoice

அந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இப்ராகிம் அலிக்கு எதிராகத் திரும்பியிருப்பதோடு, அவர் 50,000 ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.குணாளன் உத்தரவிட்டுள்ளார்.