Home நாடு லகாட் டத்து விவகாரம் பற்றி முடிவெடுக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் – அன்வார் கோரிக்கை

லகாட் டத்து விவகாரம் பற்றி முடிவெடுக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் – அன்வார் கோரிக்கை

581
0
SHARE
Ad

Anwar-slider--கோலாலம்பூர், மார்ச் 6 – லகாட் டத்து விவகாரம் பற்றி முடிவு எடுக்க  நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யும்படி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஊடுருவல்காரர்களுடனான சண்டையில்  இதுவரை 8 மலேசியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையில் அரசாங்கம் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக எடுக்கும் முடிவுகளில் தான் இந்த தேசத்தின் பாதுகாப்பே அடங்கியுள்ளது என்று அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

” நாங்கள் (மக்கள் கூட்டணி) அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக வாதிடவில்லை அதேவேளையில் இது நமது நாட்டின் பாதுகாப்பிற்கு வந்திருக்கும் ஒரு சிக்கல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்”என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த சிறப்புக் கூட்டம் தொடர்பாக தான் விடுத்த கோரிக்கையை தேசிய முன்னணியைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்த பின்னரே இந்த அறிக்கையை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

லேபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுவா டி யோங் மற்றும் ஆயர் இத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கா சியாங் ஆகியோர் இதுபற்றி கூறுகையில், ” மலேசிய படையினர் மூலமாக மிக விரைவில் இப்பிரச்சைனைக்கு ஒரு தீர்வு காண்பதே நமது ஒரே நோக்கம் ” என்று தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், “பிலிப்பைன்ஸ் ஊடகங்களான ‘பிலிப்பைன்ஸ் டெய்லி இன்கொயரர்’ மற்றும் ‘ரியுடெர்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் மக்கள் கூட்டணி மட்டுமே அரசாங்கத்துடன் இணைந்து இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முன்வந்திருப்பதாகத் தெரிவித்திருந்தன” என்று கூறினர்.

ஆனால் அன்வார் இதுபற்றி இன்று கருத்து தெரிவிக்கையில், இன்கொயரர் தன்னைத் தொடர்பு கொண்டு இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தன்னுடைய விருப்பம் பற்றி விளக்கமளிக்க வேண்டும் என்றும், பிரத்யேக பேட்டி ஒன்றை அளிக்குமாறு தன்னைக்  கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ” நான் சுலு சுல்தான் ஆட்களைச் சந்தித்தாக, உளவுத்துறையின் தகவலை அடிப்படையாகக் கொண்டு ‘இன்கொயரர்’ ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறதே தவிர, நான் நேரடியாக இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் சொல்லவில்லை” என்று அன்வார் கூறினார்.