Home உலகம் ஐ.நாவில் 46 அரச சார்பற்ற நிறுவனங்கள் போலித் தகவல்களை வழங்கியுள்ளன: சிங்களப் பத்திரிகை

ஐ.நாவில் 46 அரச சார்பற்ற நிறுவனங்கள் போலித் தகவல்களை வழங்கியுள்ளன: சிங்களப் பத்திரிகை

580
0
SHARE
Ad

sri-langkaஇலங்கை, மார்ச்.6- ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு இலங்கை தொடர்பில் 46 அரச சார்பற்ற நிறுவனங்கள் போலித் தகவல்களை வழங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு போலித் தகவல்களை வழங்கிய 46 அரச சார்பற்ற நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்களாகும்.

அமெரிக்கா, பிரிட்டன், செக்குடியரசு, மெக்ஸிக்கோ, கனடா, ஸ்பெய்ன், நெதர்லாந்து, செக்குடியரசு மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளன.

#TamilSchoolmychoice

வடக்கில் மாகாணசபைத் தேர்தல், உயர் பாதுகாப்பு வலயம், திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை, மூதூர் அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் கொலை போன்ற விடயங்கள் குறித்து இந்த நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன.