Home இந்தியா நாளை காலை 11 மணிக்கு முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா!

நாளை காலை 11 மணிக்கு முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா!

524
0
SHARE
Ad

jayalalitha-new-photo-600சென்னை, மே 22 – தமிழகத்தின் முதல்வராக 5-வது முறையாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை காலை 11.00 மணிக்குப்  பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்  குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. ஆனால் இந்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப்  பதவியேற்க உள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டசபைத்  தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

#TamilSchoolmychoice

இதன் பின்னர் ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ரோசையா அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக 5-வது முறையாக நாளை பகல் 11.00 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்க உள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது.