புது டில்லி, மார்ச்.6- இலங்கையில் தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் உதவித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காங்கிரஸ் தரப்பு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சந்தித்து இலங்கை தமிழர் விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் பக்கமே இந்தியா இருக்கிறது. அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம். எனினும் அந்த தீர்வு தனி ஈழமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதுடில்லியில் நாளை நடைபெறவுள்ள தமிழீழ ஆதரவாளர் டெசோ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பது தொடர்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும், அதன் பின்னர் இது குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியிருப்பதாக த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.