Home நாடு லகாட் டத்து துப்பாக்கிச் சண்டை – ஊடுருவல்காரர்களில் ஒருவர் பலி

லகாட் டத்து துப்பாக்கிச் சண்டை – ஊடுருவல்காரர்களில் ஒருவர் பலி

640
0
SHARE
Ad

aலகாட் டத்து, மார்ச் 6 –  நேற்று லகாட் டத்து, கம்போங் தண்டோவில் மலேசிய படையினர் மேற்கொண்ட வான் மற்றும் தரை வழித் தாக்குதலைத் தொடர்ந்து இன்று காலை 6.45 மணியளவில் தொடங்கிய துப்பாக்கிச் சண்டையில் மேலும் ஒரு எதிரி கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து, இன்று செய்தியாளர் கூட்டத்தில் தலைமை காவல்துறை அதிகாரி இஸ்மாயில் ஓமர் கூறுகையில், ” இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் இந்த துப்பாக்கிச் சண்டையில் எதிரி ஒருவர் சுடப்பட்டார், அவர் இறந்துவிட்டார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு கருதி தாங்கள் இன்னும் இறந்தவரின் உடலை மீட்க முயற்சி செய்யவில்லை என்றும், பாதுகாப்புப் படையினருக்கோ அல்லது காவல்துறையினருக்கோ இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.