Home நாடு குளுவாங்: நகைக்கடை உரிமையாளர் குத்திக் கொலை

குளுவாங்: நகைக்கடை உரிமையாளர் குத்திக் கொலை

588
0
SHARE
Ad

Crime-Pixகுளுவாங், மே 23 – ஜாலான் டத்தோ கப்டன் அகமட்டில் அமைந்துள்ள நகைக்கடை முன்பு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் அக்கடையின் உரிமையாளர் உயிரிழந்தார்.

நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் நகைக்கடையை அதன் உரிமையாளரான லீ செங் வெய் (49 வயது) திறக்க முற்பட்டபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இச்சமயம் ஓர் ஆடவருடன் லீ வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதையடுத்து அந்நபர் கூர்மையான பொருளால் அவரை குத்தியதாகவும் தெரிய வருகிறது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து நகைக் கடை ஒன்றில் கொள்ளை முயற்சி நடப்பதாக தமக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்ததாக குளுவாங் பகுதியின் தற்காலிக ஓசிபிடி துணை கண்காணிப்பாளர் மொகமட் நூர் மொகமட் தெரிவித்தார். காலை 9.40 மணியளவில் வந்த அந்த அழைப்பில், தாக்குதலுக்குள்ளான நபர் சம்பவ இடத்தில் வலியால் துடிப்பதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

“தாக்குதலுக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே நிலைதடுமாறி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்துள்ளார். அவரை தாக்கிய நபர் சம்பவ இடத்திலிருந்து கறுப்பு நிற டொயோட்டோ காரில் தப்பிச் சென்றுள்ளார். அந்த காரின் பதிவு எண் போலியானது எனத் தெரிய வந்துள்ளது,” என்று மொகமட் நூர் மொகமட் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக அவர் மேலும் கூறினார்.