Home Photo News ஜெயலலிதாவுக்கு கோலாகல, உற்சாக வரவேற்பு! (படக் காட்சிகள்)

ஜெயலலிதாவுக்கு கோலாகல, உற்சாக வரவேற்பு! (படக் காட்சிகள்)

1037
0
SHARE
Ad

சென்னை, மே 23 – கடந்த ஆறு அல்லது ஏழு மாதங்களாக எங்கும் போகாமல், தனக்குள்ளேயே வீட்டுச் சிறையை விதித்துக் கொண்டது போல் வாழ்ந்து வந்த ஜெயலலிதா, நேற்று வெளியே வந்து சென்னையையே ஒரு கலக்கு கலக்கினார்.ADMK State Assembly members elect Jayalaltiha May 22

‘மம்மி ரிடர்ன்ஸ்’ என அனைவராலும் கலாய்க்கப்பட்ட நேற்றைய தினம் முதல் கட்டமாக, காலையில் நடைபெற்ற முதல் அங்கம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம். அமைச்சர்கள் அந்தக் கூட்டத்தில் உரையாற்றும் காட்சி…

State assembly members elected Jayalalitha May 22

#TamilSchoolmychoice

ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்ந்தெடுக்கக், கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம்….

Crowds waiting for Jayalalitha May 22அம்மாவின் வருகைக்காக திரண்ட அதிமுக ஆதரவாளர்களும் – பொதுமக்களும்…

Women q to welcome Jayalalitha May 22

ஜெயலலிதாவை பூரண கும்பத்துடன் வரவேற்க வரிசை கட்டி நிற்கும் பெண்மணிகள்…

Jayalalitha returns May 22

ஜெயலலிதா செல்லும் வழியெல்லாம் அவரது புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளோடு வரவேற்பு வழங்கிய ஆதரவாளர்கள்…

Jayalalitha returns crowds May 22

உற்சாகம் கரைபுரண்டோட, தெருக்களில் திரண்ட பொதுமக்கள்….

Jayalalitha Garlands Anna May 22

ஆட்சியில் அமரும் கட்சியின் கொடியில் நிரந்தர சின்னமாக இடம் பெற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தி ஜெயலலிதா மாலை அணிவித்தபோது…

Women in Green sarees welcoming Jayalalitha May 22

அம்மாவுக்கு பிடித்த பச்சை வண்ண சேலைகளின் அணிவகுப்போடு, வாழ்த்தும், வரவேற்பும் வழங்கும் அதிமுக மகளிர் அணியினர்…

Jayalalitha garlands MGR May 22 எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தாமல் பதவி ஏற்பா? அதிமுகவின் நிறுவனரும், ஜெயலலிதாவின் அரசியல் குருவுமான முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் ஜெயலலிதா…